காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தை பாதுகாப்புடன் கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் கேட்டுக் கொண்டு அதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளார்..
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
2025 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 31.12.2024 இரவு 7.00 மணிமுதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான GWT, மாநகர பிரதான சாலை மற்றும் மாவட்டத்தின் பல முக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 36-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல் ஆளிநர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேலும், மாவட்டத்தில் சுமார் 160-க்கும் மேற்பட்ட மிக முக்கிய இடங்கள். கோயில்கள். தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
மேலும் 17-க்கும் மேற்பட்ட காவல்துறை ஆய்வாளர் பணிநிலைக்கு மேலுள்ள அதிகாரிகள் தொடர் ரோந்து அலுவலில் ஈடுபடுததப்படவுள்ளனர்.
மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்கு காவலர்களுடன் ஊர்காவல் படையினர் சேர்ந்து மொத்தம் 800 காவல் அதிகாரிகள் / ஆளிநர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்வருமாறு:
தேசிய மாநில மற்றும் மாநகர பிரதான சாலைகளில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டமானது 01.01.2025-ந் தேதி 01.00 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும், கொண்டாட்டங்களும் நடத்தக்கூடாது
பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தல் கூடாது.
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது. மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனத்தை பறிமுதல் செய்யப்படும்.
இரண்டு சக்கர வாகனத்தை இயக்குபவரும் பின் அமர்ந்து வருபவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும். நான்கு சக்கர வாகனத்தை இயக்குபவர் சீட்பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.
இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பெண்களை கேலி மற்றும் கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். மீறும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தேசிய , மாநில மற்றும் மாநகர பிரதான சாலைகளில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக வாகன பந்தயம் மற்றும் சாகசத்தில் (Bike Race) ஈடுபடக்கூடாது. மீறும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்புவிக்கப்படும்.
இந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடி இந்த பண்டிகை நாட்களில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி கடந்து செல்ல காவலதுறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தங்கள் பகுதிகளில் செயல்படும் பொழுதுபோக்கு தலங்கள் மற்றும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அது குறித்தும். மதுபோதையில் வாகனத்தை இயக்குதல் மற்றும் வாகன சாகசங்களில் ஈடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் HELLO POLICE NUMBER 9498100260 -க்கு எவ்வித தயக்கமுமின்றி உடனடியாக தொலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக தகவல தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் இரகசியமாக பாதுகாப்பப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் தொடர்புக்கு:
காவல் கட்டுப்பாட்டு அறை
044-27236111
மாவட்ட தனிப்பிரிவு எண்
044- 27238001
செல்போன் : 9498100260