உத்திரமேரூர் அருகே ஆலமரத்திற்கு ஆறாம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்ற தன்னார்வலர்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் 2018 ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பனை விதை நடுதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் இரத்ததான முகாம் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் உத்திரமேரூர் அடுத்த கம்மாளம்பூண்டி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் அருகே உள்ள குளக்கரையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஆல மரக்கன்று ஒன்று நட்டு உள்ளனர்.
தற்போது அந்த ஆலமரம் வளர்ந்து பெரியதாக உள்ள நிலையில் இன்று ஆலமரத்திற்கு ஆறாம் ஆண்டு பிறந்தநாள் விழாவை டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்றத்தினர் கொண்டாடினர்.
முன்னதாக, டீ கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் மன்றத்தினர் ஆலமரத்திற்கு பலூன் கட்டி ஆலமரத்தின் அருகே கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும், டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்றத்தில் பல்வேறு நற்பணிகள் செய்து மறைந்த பாலா என்பாரின் நினைவாக அந்த ஆலமரத்திற்கு பாலா ஆலமரம் எனவும் டீக்கடை பென்ஸ் பாய்ஸ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் பெயர் சூட்டியுள்ளனர்.
வாழ்த்துக்கள் உங்கள் ஊர் முழுவதும் காலியாக உள்ள இடங்களில் மரங்கள் நடுங்கள் உங்கள் ஊரை ஒரு காட்டுக்குள் இருப்பதுபோல் மாற்றுங்கள் அரசினையோ அதிகாரிகளையோ நம்பவேண்டாம்.