Close
ஜனவரி 7, 2025 6:19 மணி

தேனி செஸ் போட்டியில் வெற்றி மாணவ, மாணவிகள்..!

தேனியில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள்.

2025ம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற  இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் D. குகேஷை பாராட்டு விதமாகவும் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியின் சார்பில் 63-வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது.

போட்டிகளை தேனி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் M. ஆனந்தகுமார் தலைமையேற்று தொடங்கி வைத்து வாழ்த்தினார். வெற்றி பெற்ற வீரார்களுக்கு ஓய்டு பெற்ற  வனச்சரகர் S. அமானுல்லா, அகாடமி செயலாளர் R.மாடசாமி  பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

போட்டி ஏற்பாடுகளை இயக்குனர் S.அஜ்மல்கான் செய்து இருந்தார். முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ்நாடு சதுரங்க கழக நடுவருமான S. சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார்.

வெற்றி பெற்றவர்கள் விபரம்:

Under – 10 பிரிவில்

1, G.ஸ்ரீநித் 2, N.சாய் சரவணா, 3, S.J. தேவாங் 4, M. தனுஷ் 5,A. லோகேஷ் கிருஷ்ணா 6, R.சர்வேஷ் 7, B.ஹனி சாக்ஸ்திதா 8, R.துஸ்யன்ந் 9, R. செல்வநிரன்ஜன் 10, B.ரோஷன் பாலாஜி ஆகியோரும்

Under – 14 பிரிவில்

1,J.தியாஸ்ரீ, 2, S. முகமதுபராஸ் 3, S.P.புவன்சங்கர் 4, S. சவன்சுந்தர் 5,A.திருகார்த்திக் 6, J. சன்ஜெய்குமார், 7,S.சூர்யாகுமரன் 8, M. அகிலேஷ் 9, S.மனோஜ் 10,A.ஸ்ரீஹரன் ஆகியோரும்,

Open to all – பிரிவில்

1, K.ராஜேஷ்வரன், 2, G.ஸ்ரீநித் 3,E. பாண்டி கிருபாகரன் 4, N.சாய் சரவணா 5,Aதிருகார்த்திக் 6, J.சன்ஜெய்குமார் 7, J.தியாஸ்ரீ 8, R.சாத்வீகா 9,A.லோகேஷ் கிருஷ்ணா 10, R.மாதவன் ஆகியோரும் , வெற்றி பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top