Close
ஜனவரி 8, 2025 8:36 காலை

உத்திரமேரூர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்..!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கல்வெட்டு கோயிலில் சாமி தரிசனம் செய்து கல்வெட்டுகளை பார்வையிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவில் கல்வெட்டுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் நடந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக பேசியதை தொடர்ந்து இந்தியா மட்டுமின்றி உலக புகழ் பெற்று விளங்குகிறது உத்திரமேரூர் கல்வெட்டு கோயில்.

அதனால், தமிழகம் மட்டுமின்றி இந்திய முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள், வரலாற்று ஆய்வாளர்கள், பள்ளி மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கல்வெட்டு கோயிலில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.‌ அதேபோல், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பார்வையிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்தினருடன் கல்வெட்டு கோவிலை பார்வையிட வருகை தந்தார். அவருக்கு, காஞ்சிபுரம் சப் கலெக்டர் ஆஷிக் அலி பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து கும்ப மரியாதை அளித்தனர்.

பின்னர், ஆளுநர் ஆர்.என். ரவி சாமி தரிசனம் செய்து கல்வெட்டு மற்றும் கோவில் சுவர்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை பார்வையிட்டார்.

தனியார் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ராஜா , கல்வெட்டு கோவில் சிறப்புகள் குறித்து ஆளுநருக்கு எடுத்து கூறினார்.

 

ஆளுநர் வருகையையொட்டி காஞ்சிபுரம் எஸ்.பி.சண்முகம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

மேலும், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் பாதுகாப்புக்கு உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிகழ்ச்சியில் தொல்லியல் துறை அலுவலர்கள், இந்து சமய அறநிலையை துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top