Close
ஜனவரி 8, 2025 4:26 மணி

தொடர் விடுமுறையால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இயல்பை விட அதிக கூட்டம்..!

பார்வை குறைபாடு உடையவர்களை பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்ய வழிகாட்டும் காவல் துறையினர்.

பார்வை மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்த கோயில் நிர்வாகம்.

மதுரை :

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விடுமுறை தினமான இன்று காலை முதலே பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கார்த்திகை மாத முதலே ஐயப்ப பக்தர்கள் வருகை காரணமாக மதுரை மட்டுமல்லாது வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் மீனா அன்புநிதியிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, அறங்காவலர் ஏற்பாட்டில் 65 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரரையும் தரிசிக்க சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக, அவர்களை கோவிலுக்கு பிரத்யோகமாக இரண்டு வேன்களில் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்ய வைக்கப்பட்டு அழைத்து சென்றனர். தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், முழு மனநிறைவுடன் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top