Close
ஜனவரி 4, 2025 1:15 காலை

ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள்..!

சாய்பாபா

பெரியபாளையம் அருகே ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் இடையே உள்ள ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோயில்.

அங்கு 2025ம் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7.30 மணி அளவில் பாபாவிற்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 9.மணி அளவில் யாக வேள்வி தொடக்க நிகழ்ச்சியில் கணபதி ஹோமம், குபேர மகாலட்சுமி ஹோமம், சாய்பாபா மூல மந்திர ஹோமம்,நவக்கிரக சாந்தி ஹோமம்,ம்ருத்யுன்ஜ ஹோமம்,நடைபெற்றது.

பின்னர் தீப ஆராதனை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி அளவில் சிறப்பு மங்கல ஆரத்தி நடைபெற்றது. தொடர்ந்து புத்தாண்டு அன்று காலை 6 மணி அளவில் ஆரத்தி தொடர்ந்து கைகளால் மூலவர் பாபாவிற்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

ஆரத்தியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவின் பஜனை பாடல்களை பாடி சாய்பாபாவை வழிபட்டனர். ஆலயத்திற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசிவ சாயி சேவா அறக்கட்டளையினர் மிகச் சிறப்பாக  செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top