காஞ்சிபுரத்தில் காஞ்சி ஸ்கேட்டிங் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஒரே நாளில் இரு வேறு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டு தனியார் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா அருகே செயல்பட்டு வருகிறது காஞ்சி ஸ்கேட்டிங் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி. இங்கு பள்ளி மாணவ மாணவியருக்கு விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் ஸ்கேட்டிங் சிலம்பம், குங்ஃபூ, ஏர்ரைபிள், செஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது.
இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விளையாட்டு திறன் குறித்த பயிற்சிகள் மேற்கொண்டு பல்வேறு தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முதலாவதாக எட்டாம் வகுப்பு மாணவி எஸ். கயல்யா மற்றும் நான்காம் வகுப்பு மாணவன் A.தாரகேஷ் ஆகியோ ரோலர் ஸ்கேட்டிங் மூலம் ஒரு கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் காரை தள்ளி செல்லும் சாதனையை நிகழ்த்தினர்.
இதேபோல் சிலம்பம் கற்ற 100 மாணவர்கள் Fire Stick எனும் நிகழ்வினை ஓரு மணி நேரம் தொடர்ச்சியாக அதனை நடத்தி மற்றொரு உலக சாதனை நிகழ்த்தினர்.
மேலும் சிலம்பம் பயிற்சி நிறைவு பெற்ற கோகுல் குமார் , யோகேஷ், ஹரிஹரன், தர்மேஷ் நான்கு மாணவர்கள் ஆசானாக அறிவிக்கப்பட்டனர்.
மேற்கண்ட இரண்டு உலக சாதனைகளையும் நோபல் ரெக்கார்டர் எனும் நிறுவன தனியார் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்நிறுவனத்தின் நடுவர் பாபு முன்னிலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டு முறைப்படி சான்றிதழ்கள் வழங்கி அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவனத்தின் தலைமை பயிற்சியாளர் பாபு , தொழிலதிபர் பொன்.சீனிவாசன், எஸ்.கே.பி சரவணகுமார், தேசிய சிலம்பம் கமிட்டி பொது செயலாளர் தியாகராஜன் உள்ளிட்ட பயிற்சி மைய வீரர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பயிற்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தனி திறமைகள் இந்நிகழ்வில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் இரு வேறு உலக சாதனைகள் நிகழ்த்தியது காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.