காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும் என எஸ்பி சண்முகம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கண்காணிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் இரண்டு காவல் உட்கோட்டங்கள் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் என அமைந்துள்ளது.
இதன் கீழ் பல்வேறு காவல் நிலையங்களில் காவல்துறையினர் கடந்தாண்டு சிறப்பாக பணியாற்றி சட்ட ஓழுங்கு நிலைநாட்டியும் குற்றவாளிகளை சிறப்பாக கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு குற்ற நிகழ்வுகள் மற்றும் அதனை சார்ந்த விவரங்கள் குறித்த செய்தி குறிப்பினை எஸ்.பி. சண்முகம் வெளியிட்டார்.
இதில் 147 சரித்திர பதிவேடு குற்றவாளிகளும் 72 இதர குற்றவாளிகள் என 219 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகும் 62 பேர் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுக் கொள்ளை வழிப்பறி போன்ற 428 வழக்குகளில் 298 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூபாய் 2 கோடியே 84 லட்சம் மீட்கப்பட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்ததாக நூறு வழக்குகளில் 165 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 13 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு 40 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்ற வகையில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 39 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 145 நபர்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து காவல்துறை சார்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 20 கொலை வழக்குகள் நடைபெற்றதாகும் அதில் 18 வழக்குகளின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும், கொலை முயற்சி மேற்கொண்டதாக 35 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் 2774 லிட்டர் மது பாட்டில்களும் 460 லிட்டர் நாட்டு சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அது தொடர்பாக 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததின் பேரில் கடந்த ஆண்டு 336 நபர்கள் சாலை விபத்தில் இருந்து உள்ளதாகவும் 1234 பேர் காயம் அடைந்துள்ளனர். வருங்காலத்தில் இது குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சாலை விதிகளை மீறிய இரண்டு லட்சத்து 62 ஆயிரம் நபர்களுக்கு 25 கோடியே 76 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களை தடுக்கும் வண்ணம் 1350 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் 14 சோதனை சாவடிகள் பிற மாவட்டத்தில் இருந்து நமது மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது.
வெளிநாடு செல்லும் நபர்கள் குற்றமில்லா ஆவணங்கள் பெறும் வகையில் பெறப்பட்ட 8190 மனுக்களை 8016 மனுக்கள் மீது சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் ஆண்டில் குற்றங்கள் குறைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி வாழும் வகையில் காவல்துறை தொடர்ந்து செயல்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.