Close
ஜனவரி 4, 2025 4:10 காலை

34 ஆண்டுகளுக்கு பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!

34 ஆண்டுகளுக்குப்பின்னர் சந்தித்துக்கொண்ட முன்னாள் ஐடிஐ மாணவர்கள்.

சோழவந்தான்:

மதுரை புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்I (ITI) 1988 முதல் 1990 வரை படித்த மாணவர்கள் மதுரை, காந்தி மியூசத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வெளிநாட்டில் குவாலிட்டி இன்ஜினியராக வேலை பார்க்கும் கண்ணையா, சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் விக்டர் ஜான்சன், காவல்துறையில் வேலை பார்க்கும் மகேந்திரன், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்க்கும் பாலசுப்ரமணியன், சொந்தத் தொழில் செய்யும் மலைச்சாமி , கணேசன் , தியாகு, முகமது இஸ்மாயில், செல்வம் மற்றும் நண்பர்கள் அனைவரும் சந்தித்து தங்களின் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

இதில் கலந்து கொள்ளாதவர்களை சந்தித்து மீண்டும் ஒரு சந்திப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்வது என்று முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்குவது என தீர்மானித்துள்ளனர்.

1990 ல் அலைபேசி இல்லாத காலமாக இருந்ததால் அந்த காலகட்டத்தில் படித்த ஒரு சில நண்பர்களை சந்திக்க இயலவில்லை. தற்போது வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் சமூக வலைதளங்களில் இந்த செய்திகளை அனுப்புவதன் மூலம் விடுபட்ட பழைய நண்பர்கள் ஒன்றிணைக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top