Close
ஜனவரி 9, 2025 6:42 காலை

தேனி மாவட்ட ரியல் எஸ்டேட் முகவர்கள் நலச்சங்க கூட்டம்

தேனி மாவட்ட ரியல் எஸ்டேட் முகவர்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்

தேனி மாவட்ட ரியல்எஸ்டேட் முகவர்கள்  நலச்சங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஜெய்முருகேஷ் தலைமையில் நடந்தது.

மாவட்டபொதுச் செயலாளர் சிங்கப்பூர் முருகேசன், மாவட்ட அவைத்தலைவர் சக்திவேல், மாவட்டதுணை செயலாளர் போதுராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் ராமகிருஸ்ணன் வரவேற்புரை வழங்கினார்.

கூட்ட முடிவில் தேனிநகரத் தலைவர் குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்தில்   சங்க வளர்ச்சிக்கு அதிக அளவில் உறுப்பினர் சேர்ப்பது மாதம் தோறும் 10-ம்தேதிநடைபெறும் மாதக் கூட்டத்திற்கு நிர்வாகிகள் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்வது, ஜனவரி மாதத்தில் சங்கத்தை பதிவு செய்வது, உட்பட பல தீர்மானங்கள். நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில்  மாவட்ட கெளரவ ஆலோசகர் கருணாகரன், தேனி ஒன்றியச் செயலாளர் ராம்பிரசாத்,  தேனி நகர செயலாளர் வையாபுரி தேனி நகர பொருளாளர் ரவிக்குமார், நகர துணைத்தலைவர் சுகுமாறன், நகர துணை செயலாளர் செந்தில்குமார், பழனிசெட்டிபட்டி தலைவர் கார்த்திக், உறுப்பினர்கள் ஜீவா. டேவிட் ஜெய்சிங்ராஜா. பாலகுரு உட்படநிர்வாகிகள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு காலண்டர்கள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top