Close
ஜனவரி 8, 2025 3:15 மணி

காரியாபட்டி அருகே ஆவியூரில் மக்களைத் தேடி மருத்துவ திட்ட முகாம்..!

மக்களைத் தேடி மருத்துவ முகாம்

காரியாபட்டி :

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் மாவட்ட காசநோய் மைய ம் சார்பாக மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலமாத காச நோய் தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடை பெற்றது.

ஒன்றியக் கவுன்சிலர் சிதம்பர பாரதி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வேல் விக்னேசர் முன்னிலை வகித்தார். முகாமில், காச நோய் பற்றியும், காசநோயாளிகளுக்கு அரசு வழங்கும் மாதம் ரூ 1000 வழங்கும் தி ட்டம் பற்றியும், நோய் தடுப்பு முறைகள் பற்றியும் மருத்துவர் மிருந்தா பேசினார்.

கூட்டத்தில், சகாதார ஆய்வாளர். சரவணகீகுமார், சுந்தர் ஐ.சி.டி,சி கவுன்சிலர் ஜான்சி மருந்தாளுநர், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

விழா ஏற்பாடுகளை, காசநோய் பிரிவு, மேற்பார்வையாளர்கள் தங்ககுமார். அக்பர் அலிபாதுஷா சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். முகாமில், பொதுமக்களுக்கு சளி, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை இலவசமாக பரிசோதிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top