காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 28 லட்சம் மதிப்பீடு கட்டப்பட்ட இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடங்களை எம்.பி செல்வம் துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக திரு செல்வம் பணியாற்றி வரும் நிலையில் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு மற்றும் திருவீதி பள்ளம் கிருஷ்ணசாமி நகர் பகுதியில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் அமைக்க அப்பகுதி மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் விளக்குடி கோயில் திருப்பதியில் ரூபாய் 13.5 லட்சம் மதிப்பீட்டிலும் திருவீதி பள்ளத்தில் 15 லட்சம் மதிப்பீட்டிலும் இரு அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் கட்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவுற்றது.
நிறைவுற்ற பணிகளை இன்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோருடன் இணைந்து எம்.பி செல்வம் துவக்கி வைத்தார்.
அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும், ஊட்டச்சத்து பொருட்களையும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, பகுதி கழக செயலாளர்கள் தசரதன், சந்துரு, மாமன்ற உறுப்பினர் ஷோபாகண்ணன், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் திமுகவினர் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.