ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலை புறக்கணிப்பது குறித்து அ.தி.மு.க., ஆலோசித்து வருகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவையொட்டி, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
க்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. அதற்கு முன்னேற்பாடாக, வேட்பாளர் தேர்வில் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க.
அதன்படி, கடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டவரையே மீண்டும் களத்தில் இறக்க முடிவெடுத்து, அவரிடம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அவரோ, “போன வாட்டியே என்னை போண்டி ஆக்கிட்டீங்க. இந்த முறை கட்சி செலவு பண்ணினா நான் நிக்கிறேன். இல்லைன்னா ஆளை விடுங்க…” எனப் பெரிய கும்பிடு போட்டு ஒதுங்கி விட்டாராம்.
ஷாக்கான கட்சித் தலைமை, மனம் தளராமல் அடுத்த முயற்சியாக ஈரோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆற்றலானவரை அணுகியதாம். அவரும் ‘2026-ல் கண்டிப்பா நிக்கிறேன். இப்ப வேண்டாம்’ என்று கைவிரித்து விட்டாராம்.
இதனால், வெறுத்துப்போன தலைமை விக்கிரவாண்டிபோல இந்த இடைத்தேர்தலையும் புறக்கணிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, இடைத்தேர்தல்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாகத்தான் இருக்கும், நியாயமாக நடக்காது. என்று கூறியிருந்தார்கள். எனவே அந்த அடிப்படையிலேயே இந்த இடைத்தேர்தலையும் புறக்கணித்து விடலாமா..?’ எனத் தீவிர யோசனையில் இருக்கிறதாம்.