Close
ஜனவரி 7, 2025 5:36 காலை

இந்துசமயப் பேரவை திருப்பாவைக்குழு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி..!

நாமக்கல் இந்துசமயப் பேரவை திருப்பாவைக்குழு சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு, சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாமக்கல்:

நாமக்கல் இந்துசமயப் பேரவை திருப்பாவைக்குழு சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மலையின் கிழக்குப்பதியில், குடவரைக்கோயிலாக அமைந்துள்ள ரங்கநாதர், ரங்கநாயகி தாயார் கோயில் அடிவாரத்தில், இந்துசமயப்பேரவை திருப்பாவைக்குழு சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்துசமயப் பேரவையின் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் டாக்டர் மல்லிகா, டாக்டர் அழகம்மாள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 20 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் அவர்களுக்கு 5 வகையான உணவு மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் டாக்டர் குழந்தைவேலு, ஆடிட்டர் வெங்கடசுப்ரமணி, ஆன்மீக இந்து சமயப்பேரவை கவுரவ தலைவர் ஏகாம்பரம், சாந்தி நல்லுசாமி, பத்மா ஜெகதீசன், சின்னம்மாள் நடராஜன், ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் கிருஷ்ணர் உபதேசம் புத்தகம் வழங்கப்பட்டது. முடிவில் இந்து சமயப் பேரவை செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top