Close
ஜனவரி 7, 2025 7:05 மணி

மானிய விலையில் விவசாயிகளுக்கு உளுந்து சாகுபடி உயிர் உரங்கள்,வேம்பு பூச்சிக்கொல்லி..! வாங்கலாம் வாங்க..!

உளுந்து விதைப்புக்கான உயிர் உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி.

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டாரம், பெரியகோட்டை மற்றும் கீழக்குறிச்சி கிராம விவசாயிகளுக்கு மானியத்தில் நெல்-உளுந்து செயல் திடல்கள் அமைக்க மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 4 ஆம் கட்ட நிலையில் பெரிய கோட்டை, புளியக்குடி, கன்னியாகுறிச்சி, காரப்பங்காடு, கீழக்குறிச்சி கிழக்கு,கீழக்குறிச்சி மேற்கு, ஒலய குன்னம், பாவாஜி கோட்டை, ஆவி கோட்டை, நெம்மேலி ஆகிய கிராமங்களில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தற்போது கோடையில் திருந்திய நெல் சாகுபடி செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து உளுந்து சாகுபடி மேற்கொள்ளும் வகையில் பசுந்தாள் உர விதை முதற்கொண்டு நெல் விதை, ஜிங்க்சல்பேட், சூடோமோனாஸ் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள்
அசாடிராக்டின் வேம்பு பூச்சிக்கொல்லி மருந்து,உளுந்து விதை 20 கிலோ, யூரியா,சூப்பர் பொட்டாசு உரங்கள்,

நெல்லிற்குப்பின் உளுந்து சாகுபடி செய்ய எக்டருக்கு 20 கிலோ உளுந்து விதை, ஒரு எக்டருக்கு தேவையானவை விதை முதல் அறுவடை வரை தேவையான அனைத்து பயிர் பாதுகாப்பு மருந்துகளுடன் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

கீழக்குறிச்சி பகுதி விவசாயிகள் கீழக்குறிச்சி வேளாண் உதவி அலுவலரிடமும், பெரிய கோட்டை சுற்றியுள்ள விவசாயிகள் பெரிய கோட்டை வேளாண் உதவி அலுவலரிடம் தொடர்பு கொண்டு 50 சத மானியத்தில் இடுபொருள் பெற்று செயல் விளக்க தளை அமைத்திட மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் கேட்டுக்கொண்டார்.

மானியத்தில் செயல் விளக்கத் தளை அமைப்பதற்கும் இடுபொருள் பெறுவதற்கும் 1 எக்டருக்கு நெல் சாகுபடி அடங்கல், ஆதார், கம்ப்யூட்டர் சிட்டாவுடன் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் அணுக வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top