திருவள்ளூர் :
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி சார்பில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 47 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தனர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 47 குழந்தைகளுக்கு திமுக மேற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கும் விழா நடைபெற்றது
இந்த விழாவில் திமுக மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி.முத்துமாணிக்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளருக்கு நல திட்ட உதவிகளை திருத்தணி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான சந்திரன் திருவள்ளூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் இணைந்து தூய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அவர்களுடன் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டனர்.