திருவள்ளூரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்- கடை வியாபாரிகள் அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் நகராட்சி உட்பட்ட பகுதி முழுவதும் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றப் போவதாக கடந்த மாதம் 30 ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைகளை அகற்ற கால் அவகாசம் அளித்தும் இதுவரை கடை உரிமையாளர்கள் கடைகளை அகற்றவில்லை.
நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் தஷ்ணவிஸ் பெர்னாண்டோ தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உதவியோடு சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சாலையோர கடை உரிமையாளர்களுக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது,
குறிப்பாக சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும்போது அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் தகாத வார்த்தையால் வசை பாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, மேலும் சிலர் ஆக்கிரமிப்பு அகற்றும் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.