Close
ஜனவரி 9, 2025 3:37 மணி

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் பிரியாவிடை நிகழ்ச்சி..! தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டு..!

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய தலைவர்

சோழவந்தான் அருகே தூய்மை பணியாளருக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்த ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர்:

சோழவந்தான்:

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகள் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளி பள்ளம் ஊராட்சியில் 5 ஆண்டுகள் பூர்த்தி செய்த ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தங்களின் மக்கள் நல பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களை பாராட்டும் விதமாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தனர்.

இதில் முள்ளிப் பள்ளம் ஊராட்சியில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊராட்சிகளின் அனைத்து பிரிவுகளில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவரையும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். பின்னர், அனைவரும் ஊராட்சி மன்ற அலுவலக வாயிலில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top