நாமக்கல் :
நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், கடந்த 6 மாதத்தில் மறைந்த, 1,062 திமுக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரம் கலைஞரின் குடும்ப நல நிதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியம், வெண்ணந்தூர் பேரூராட்சி மற்றும் அத்தனூர் பேரூராட்சியில் கடந்த மார்ச் 2024 முதல் தற்போது வரை இறந்த 158 திமுக உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திராவிட சிந்தனை எழுத்தாளர் மதிமாறன் முன்னிலை வகித்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 158 திமுக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு கலைஞர் குடும்ப நல நிதியை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:
இதுவரை, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், நாமக்கல் கிழக்கு நகரத்தில் 36 மறைந்த திமுக உறுப்பினர்கள், நாமக்கல் மேற்கு நகரம் 25, நாமக்கல் தெற்கு நகரம் 32, நாமக்கல் ஒன்றியம் 49, மோகனூர் ஒன்றியம் 107, புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் 47, புதுச்சத்திரம் வடக்கு ஒன்றியம் 41, மோகனூர் பேரூராட்சி 28, சேந்தமங்கலம் ஒன்றியம் 104,
கொல்லிமலை ஒன்றியம் 29, எருமப்பட்டி ஒன்றியம் 70, சேந்தமங்கலம் பேரூராட்சி 39, எருமப்பட்டி பேரூராட்சி 3, சீராப்பள்ளி பேரூராட்சி 20, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி 61, காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி 29, ராசிபுரம் நகரம் 27, ராசிபுரம் ஒன்றியம் 48, வெண்ணந்தூர் ஒன்றியம் 102, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் 93,
அத்தனூர் பேரூராட்சி 21, வெண்ணந்தூர் பேரூராட்சி 35, பட்டணம் பேரூராட்சி 4, பிள்ளாநல்லூர் பேரூராட்சியில் 12 திமுக உறுப்பினர்கள், என கடந்த 6 மாதத்தில் மறைந்த, 1062 திமுக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு, கலைஞர் குடும்ப நலநிதியாக ரூ.1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய திமுக செயலாளர் துரைசாமி, பேரூராட்சி செயலாளர் கண்ணன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் விஜயபாஸ்கர், சார்பு அணி அமைப்பாளர்கள் சித்தார்த், கிருபாகரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இளம்பருதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.