சிவகங்கை:
பேரறிஞர் அண்ணா, பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில்,பள்ளி மாணாக்கர்களுக்கான மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சிவகங்கை அரண்மனை வாசல் அருகில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கின்ற வகையில், பள்ளி மாணாக்கர்களுக்கான மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித்,கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்போட்டியானது, 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15கி.மீ தூரமும்,13வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 10கி.மீ தூரமும்,15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20கி.மீ தூரமும், 15 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், 17 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு 15 கி.மீ தூரமும் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.
இப்போட்டியில், மொத்தம் 300க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில், பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு, முதல்பரிசு ரூ.5000மும், இரண்டாம் பரிசு ரூ.3000மும், மூன்றாம் பரிசு ரூ.2000மும் மற்றும் 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.250மும் ஆகிய பரிசுத்தொகைக்கான காசோலைகள் வெற்றி பெற்ற மாணாக்கர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளது.
பாராட்டுச் சான்றிதழ்கள் இந்நிகழ்வின் வாயிலாக உடனடியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.