தாமரைப்பாக்கம் அருகே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம் 1000. பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.
திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தாமரைப்பாக்கம் அடுத்த கொமக்கம்பேடு ஊராட்சி பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும்1000 விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கோடு வெளி தங்கம் முரளி தலைமை தாங்கினார். அமைப்பாளர் ஆளவந்தான், தங்கராஜ், அமைப்பாளர் தரணி ரவி ஆகியோர் வரவேற்றார். துணை செயலாளர் வி. ஜே.சீனிவாசன், ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பி.ஜி. முனுசாமி, எம்.குமார், இ. சுப்பிரமணி, வி. நாகலிங்கம், உமா சீனிவாசன்,லோகநாதன், ஜி,பாஸ்கர், டீ.பாஸ்கர், கே.ஜி.அன்பு,ஸ்ரீதர், நாராயணசாமி, சீனிவாசன்,சுப்பிரமணி, வெங்கடேஸ்வரி, ருக் மாங்கதன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர், பூந்தமல்லி எம்.எல். ஏ.ஆ.கிருஷ்ணசாமி, திரு வி க நகர் எம்.எல்.ஏ. தாயகம் கவி, தொகுதி பொறுப்பாளர் பிடிசி செல்வராஜ், தலைமை கழக பேச்சாளர் சாய் ரித்திக் சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டு 1000.பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்.இதில் பேசிய அமைச்சர் நாசர் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் சா.மு. நாசர்,
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை தமிழ் மொழியை எந்த கொம்பனாலும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும், பாஜகவுடன் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு நாடகம் ஆடி வருகின்றனர்.இதனை தமிழக மக்கள் கவனித்து வருவதாகவும், அவர்களுக்கு 2026.ஆம் ஆண்டு தகுந்த பாடம் கற்பிப்பார் என்று சாடினார்.
மேலும் அவர் பேசுகையில் தமிழக முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்தில் பயணம் செய்தவர் எண்ணிக்கை 571 கோடி பேர், இதன் மூலம் அரசுக்கு ₹.6,800 கோடி வருவாய் இழப்பு என்றும், உயர் கல்வியில் பயிலும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 3லட்சத்து 28,000 பேருக்கு திராவிட மாடல் ஆட்சி மாதந்தோறும் ₹.1000 வழங்கி வருகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர், மாதந்தோறும் ₹.1000 ஆரம்பப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் பசியுடன் வந்து கல்வி பயிலக் கூடாது என்ற தாயுள்ளத்தோடு சிந்தித்து அவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்தி வருபவர் நம் முதல்வர் என்றும், தமிழகத்தில் செயல்படுத்தும் அனைத்து முத்தான திட்டங்களை அண்டை மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நம் முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அவர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் காயத்ரி ஸ்ரீதரன்,எத்திராஜ், கமலேஷ், தண்டலம் என். கிருஷ்ணமூர்த்தி, காஞ்சனா முனுசாமி, சேகர், ரஜினி, அச்சுதன், கண்ணன்,சரத்குமார், ரஞ்சித், டேவிட், ரகு, இளம் தென்றல்,சூரியமுத்து, வாலீஸ்வரன்,தமிழ் மூர்த்தி, பிரகாஷ், கோபிநாத், சார்லஸ், ரகு, விஜயகுமார், செம்பேடு செல்வம், ஆகிய உட்பட பலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி அமைப்பாளர் சரத்குமார் நன்றி கூறினார்.