திருவள்ளூரில் சாலை விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு: இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் பேருந்துகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் ஜேஜே கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் 52 வயதாகும் இவர் திருப்பாச்சூர் அரசு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்
இதனைத் தொடர்ந்து உடற்பயிற்சி ஆசிரியர் பாஸ்கர் தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்
உடற்பயிற்சி ஆசிரியர் பாஸ்கரன் மீது மோதியது அரசு பேருந்து என கூறப்படும் நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை நெல் கொள்முதல் நிலையம் அருகே தனியார் பேருந்துகள் சாலையை ஆக்கிரமித்து இரவு நேரங்களில் நிறுத்தப்படுவதால் இது போன்று சாலை விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதும் அதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளதாகவும் உடனடியாக தனியார் பேருந்து சாலை ஓரத்திலும் சாலையை ஆக்கிரமித்தும் நிறுத்தப்படுவதையும் காவல்துறையினர் அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.