Close
ஜனவரி 8, 2025 9:15 காலை

பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!

அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்

பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் பொதுமக்களும் திரளாக பங்கேற்பு

சோழவந்தான்:

மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக மாநகராட்சிக்கு அருகில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து அதிமுக சார்பில் பரவை மெயின் ரோட்டில் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பரவை முன்னாள் சேர்மன் ராஜா தலைமையில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top