Close
ஜனவரி 8, 2025 9:18 காலை

நியாய விலைக்கடைகளில் பொதுமக்களை அவதூறு பேசும் கடை ஊழியர்..! பொதுமக்கள் புகார்..!

ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு குவிந்துள்ள மக்கள்

மதுரை:

“அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை” – என தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நியாய விலைக்கடைகளில் பல இடங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், மதுரை மத்திய தொகுதியான அமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராசன் அவர்களின் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திடீர் நகர், ஆர்.எம்.எஸ்., நியாயவிலைக் கடையில் பொதுமக்களை அலைக்கழிப்பு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த கடையின் செயல்பாடு குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினால், முறையாக அரிசி, பருப்பு போன்ற பொருட்களைக் கொடுக்காமல் மக்களை அலைக்கழிப்பு செய்வதாகவும், பொருட்கள் வாங்க வரும் மக்களை அவதூறு பேசுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, இது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரடியாக ஆய்வு செய்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top