நாமக்கல்:
நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில், புறக்காவல் நிலையத்தை போலீஸ் எஸ்.பி. திறந்து வைத்தார்.
நாமக்கல் முதலைப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில், பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில், ரூ. 1.80 லட்சம் மதிப்பில், 9 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. புறக்காவல் நிலையம் திறப்பு விழா மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் துவக்க விழா நடைபெற்றது. ஏ.எஸ்.பி., ஆகாஸ்ஜோஷி, இன்ஸ்பெக்டர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்து, புறக்காவல் நிலையம் மற்றும் சிசிடிவி கேமராக்களை துவக்கி வைத்து பேசியதாவது:
சி.சி.டி.வி. கேமாரக்கள் போலீசாரரைப் பொருத்தவரை, ஒன்ஆப்த போலீஸ். நாங்கள் இல்லை என்றாலும், சி.சி.டி.வி. கேமரா இருந்தால், போலீசாரைக் கண்டதுபோல், திருடர்கள் பயப்படுவார்கள். காரணம், சி.சி.டி.வி., கேமராவில், முகம் பதிவாகவிட்டால், போலீசார் எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்ற அச்சம் திருடர்களுக்கு ஏற்படும்.
அதனால், சி.சி.டி.வி., என்பது, ஒரு வீட்டுக்கு, மாத சம்பளத்திற்கு வாட்ச்மேனம் நியமனம் செய்வதுபோலாதகும். இது ஒரு முதலீடுதான். இதுவரை, அரசு நிதியில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி, பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தோம். வரும் காலங்களில், பொதுமக்கள் நிதியில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் அமைத்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள உள்ளோம் என அவர் கூறினார்.