உசிலம்பட்டி:
பொங்கலுக்கு போனஸ், பசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது:
தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஒவ்வொரு ஆண்டு தோறும் பால் உற்பத்தி விலையை உயர்த்த கோரிக்கை, 50 சதவீத மானிய விலையில் தீவணங்கள், பொங்கலுக்கு போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பால் உற்பத்தியாளர்கள் மையத்தில் பால் உற்பத்தி விலையை 10 ரூபாய் உயர்த்த கோரியும், கால்நடை தீவனத்திற்கு 50% மாணியம் வழங்க கோரியும், பொங்கல் போனஸ் பெற வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ,ஒவ்வொரு ஆண்டும் போராடியே பால் விலையை உயர்த்தும் நிலை இல்லாது, ஒவ்வொரு ஆண்டின் உற்பத்தி மற்றும் தீவனங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கனிமாக பால் விலையை அரசே உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பால் உற்பத்தி விலையை உயர்த்த கோரி தொடர்ந்து பால் நிறுத்த போராட்டம், கறவை மாடுகளுடன் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர.