ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பணியின் போது இறந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களை பாதுகாத்திட கருணை அடிப்படையில் உடனடியாக பணி வழங்க வேண்டும்,
தமிழக முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுதல் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டமானது நடைபெற்றது
அந்த வகையில், தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சார்பில் சாலை மறியல் போராட்டமானது தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னதாக, ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் இருந்து பேரணியாக வந்த ஊழியர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய நிலையில், தொடர்ந்து மதுரை -தென்காசி நெடுஞ்சாலையில் படுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து, அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.