Close
ஜனவரி 9, 2025 6:20 காலை

திருக்குற்றாலநாதர் ஆலய திருவாதிரை திருவிழா தேரோட்டம்..!

குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோவிலில் திரு தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்

திருக்குற்றாலநாதர் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவாதிரை திருவிழாவின் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி பஞ்ச வாத்தியங்கள் முளங்க கோலகலமாக நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப்பெற்ற குற்றாலநாதசுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விழாநாட்களில் நாள்தோறும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இன்று திருவாதிரை திருவிழாவின் திருத்தேரோட்ட விழா நடைபெற்றது. முதலில் விநாயகர், முருகர், நடராஜர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மன் ஆகிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்ச வாத்தியங்கள் மற்றும் கோலாட்டத்துடன் இழுக்கப்பட்டது.

இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். வருகிற11-ஆம் தேதி தேதி காலை 9 மணிக்கு மேல் தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 13-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது.

மேலும் விழா நாட்களில் தினமும் காலை, இரவு நேரங்களில் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top