Close
ஜனவரி 11, 2025 9:10 காலை

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி..!

கோப்பு படம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வு எழுதுபவர்கள் இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி என பார்க்கலாம்?

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் சேர, சென்னை கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப்-2 வுக்கு 507 காலிப்பணியிடங்களும் மற்றும் தொகுதி குரூப்-2 ஏ-வுக்கு 1820 காலிப்பணியிடங்களும், மொத்தமாக 2327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்தாண்டு ஜூன் 20ம் தேதியன்று வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வானது செப்.14 அன்று நடத்தப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த படிவ நகல் , ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top