Close
ஜனவரி 11, 2025 9:11 காலை

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு என்பதெல்லாம் வெறும் பேப்பரில் மட்டுமே : தமிழிசை சௌந்தரராஜன் ..!

சென்னை

தமிழிசை சௌந்தரராஜன் -கோப்பு படம்

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு சட்டம் என்பது வெறும் வெற்று பேப்பரில் மட்டுமே உள்ளது எனவும், தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசுடன் அரசியல் காரணங்களுக்காக முரண்பாடு கொண்டுள்ள திமுகவால் தமிழகம் பாதிப்பு அடைகிறது என தமிழ் சௌந்தரராஜன் பேட்டி ..

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவில் தமிழக முன்னாள் பாஜக தலைவரும் முன்னாள் ஆளுருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த பின் பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் தாய் தந்தையரின் அவசியத்தை எடுத்துரைத்தார். சிறந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் வீட்டு மனை பத்திரங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில், தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் என்பது பேப்பரில் மட்டுமே உள்ளது எனவும் அதற்கான தொலைபேசி அழைப்பு அழைத்தால் காத்திருக்கும் நிலையும் உள்ளது வருத்தத்தை அளிக்கிறது..

மேலும் கிண்டி பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் மற்றொரு நபர் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

திமுக அரசு அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட மறுப்பதால் தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டம் அனைத்தும் கிடைப்பதில்லை எனவும், பக்கத்து மாநிலமான ஆந்திராவில் மக்கள் பல்வேறு சிறப்பு திட்டங்களை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காத உதயநிதி கவர்னரை பார்த்து வாக்கிங் செல்வது போல் வந்து செல்கிறார் என கூறிய நிலையில் அவர் செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் ரன்னிங் செய்கிறாரா என கேள்வி எழுப்பினார்..

ஈரோடு இடைத்தேர்தல் போட்டி குறித்து தமிழக தலைவர் அறிவிப்பு வெளியிடுவார் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் பாபு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பள்ளி தலைமை செயல் அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top