Close
ஜனவரி 11, 2025 10:01 காலை

வாடிப்பட்டி ஒன்றியத்தில் கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் பயிற்சி முகாம்..!

வாடிப்பட்டி ஒன்றிய, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் ஊழியர் பயிற்சி முகாம் நடந்தது.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி ஒன்றிய, அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் ஊழியர் பயிற்சி முகாம் குட்லாடம்பட்டியில் நடந்தது. இந்த பயிற்சி முகாமிற்கு, மாநில குழு உறுப்பினர் முத்துராக்கு தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு உறுப்பினர் பகவதி வரவேற்றார். இதில் , தேசிய குழு உறுப்பினர் ஈஸ்வரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல் மாவட்ட செயலாளர் மதிவாணன் சிறப்புரை ஆற்றி னார். ஒன்றியத்தலைவர் இரவீந்தி ரன் பயிற்சியளித்தார். இந்த பயிற்சி முகாமில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-

ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்கள் மற்றும் அனைவரின் பார்வைக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட என்.எம்.ஆர். வேலை செய்யும் தொழிலாளர்களின் பட்டியல் வைக்கப்பட வேண்டும்.
பஞ்சாயத்தில் இருக்கும் அட்டைகள் கிராம சபையில் தணிக்கை செய்யப்பட்டு இறந்தவர்கள் உள்ளிட்ட போலி அட்டைகள் நீக்கப்பட வேண்டும்.

வேலை அட்டை கோரும் மனுக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சட்ட விதிகளின்படி மனு கொடுத்த 15 நாட்களுக்குள் அட்டை கொடுக்க வேண்டும். ஊராட்சி தலைவர் களின் காலத்தில் நிர்வாகத்தில் பல்வேறு குறைபாடுகள், சிதைவுகள் ஏற்பட்டன.

அதிகாரிகள் நிர்வாக பொறுப்பேற்றுள்ள இச்சமயத்தில் சட்டப்படியான நிர்வாக முறையில் உள்ள நபர்கள் பத்தாண்டுகளுக்கு மேல் பணியில் இருக்கும் பணித்தளப் பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டு புதிய நபர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

நிலுவையில் உள்ள குறைபாடுகளை முன்னிறுத்தியும், அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும், அறிவிக்கப்பட்ட சட்ட கூலியை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி கடைசி வாரத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்பட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top