Close
ஜனவரி 11, 2025 9:52 காலை

மதுரை வருமான வரித்துறை பொங்கல் நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு..!

நடிகர் வடிவேலு பேட்டியளித்தபோது

மதுரை:

மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது :

வருமானவரித்துறை சார்பில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.நான்கு நாளுக்கு முன்பு எனக்கு பொங்கல் வந்தது போல உள்ளது. மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற ஆசைப்பட்டேன் அது நடந்துவிட்டது.

அதனை இங்கே சிறப்பாக கொண்டாடி விட்டேன் .மாடு பிடிக்கிற ஆள் நான் கிடையாது. மாடு பிடிப்பதை வேண்டுமென்றால் பார்க்கலாம். என்னைய அதுல தள்ளிவிட்டு போயிராதிங்க என்றார். ஜல்லிக்கட்டு போட்டியை முடிந்தால் பார்க்கப் போவேன்.

பொங்கலை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு போக வேண்டும். நிறைய வேலை இருக்கிறது.  அடுத்த படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் .

அடுத்து என்னென்ன படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

கேங்கர்ஸ் சுந்தர் சி படத்திலும், பகத் பாசிலோடு சேர்ந்து மாரிசன் படம் ஒன்று என இரண்டு படங்களும் ரெடியாக இருக்கிறது. அடுத்து பிரபுதேவாவும் நானும் சேர்ந்து ஒரு படம் பண்ணுகிறோம் என்றார்.

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என சொன்னேன் அது ஜாலியான மேட்டர் தானே? வடிவேல் சொன்னதுனால எதுவும் தப்பில்லை. ஏழை பாழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கன்னு சொன்னேன்.

வேற ஏதாவது பேசுவோமா?

23ம் புலிகேசி மாதிரியான படங்களை எப்போது படங்களை எதிர்பார்க்கலாம் ?

இப்போதெல்லாம் தேர்வுசெய்து படங்களை நடிக்கிறேன். மாமன்னன் ஒரு மாதிரியான கதாபாத்திரம் ,
கேங்கர்ஸ் முழு நீள நகைச்சுவை படம். ரொம்ப சிறப்பாக இருக்கும். கேங்கர்ஸ் குழந்தை குட்டிகளோடு சேர்ந்து எல்லாரும் ரசிக்கும் அளவிற்கு பிரமாதமாக வந்துள்ளது.

மூன்று பரிமாணங்களில் நடித்து வந்தேன். ராக் காமெடி விட்டுவிட்டேன், டிராக் காமெடி பண்ணேன், ஹீரோக்கள் காம்பினேஷன் பண்ணினேன், தனியாக ஹீரோ என மூன்று கைவசம் வைத்திருக்கிறேன்.

தற்போது டிராக் காமெடி இல்லை. அதனால் பல கதையோடு காமெடி வருகிறது.கேங்கர்ஸ் படம் என்பது ஆதவன் படம் மாதிரி முழுக்க முழுக்க நகைச்சுவை. இவ்வாறு கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top