வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வாடிப்பட்டி சார்பாக தைப்பொங்கல் விழா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு, சங்க செயலாளர் வழக்கறிஞர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.
அரசு வழக்கறிஞர்கள் ராமசாமி, பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் கண்ணன் வரவேற்றார். இந்த விழாவில், நீதிபதிகள் ராம்கிஷோர் செல்லையா ஆகியோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சூரிய பொங்கல் வழிபாடு செய்து ஜல்லிக்கட்டு மாட்டிற்கு பொங்கல் வழங்கி மரியாதை செய்து பரிசுகள் வழங்கினர்.
இதில், சங்க நிர்வாகிகள் விஜயக்குமார், கணேசன், சுரேஷ், சர்மிளா, பூர்விசா, வைரமுத்து. அருள் கண்ணன் உள்பட கலந்து கொண்டனர். முடிவில், சங்க பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.