Close
ஜனவரி 11, 2025 10:35 காலை

பழமைவாய்ந்த கோயில்களின் கட்டுமான பணிகளை எம்.எல்.ஏ ஆய்வு..!

ஆய்வு செய்த எம்.எல்.ஏ

பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி கோயிலின் கட்டுமான பணிகளை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆய்வு – தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையான கட்டமைப்பு என பெருமிதம்:

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது,பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி கோயில்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலின் புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை , உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் நேரில் ஆய்வு செய்தார்., கோவிலின் உள்கட்டமைப்பு, சங்கிலி கருப்பசாமி சிலை, அர்த்த மண்டபம் உள்ளிட்டவற்றின் வேலைப்பாடுகளை கண்டு வியந்த எம்.எல்.ஏ.அய்யப்பன், இந்த கட்டமைப்புகளை காணும் போது தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்ப கலைகள் போன்று உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து, கோயிலின் பாதை மற்றும் தரைதள பகுதிகளில் பேவர் ப்ளாக், கழிப்பறைகள் வசதிகளை மேற்கொள்ள உறுதுணையாக இருந்து பேவர் ப்ளாக் மற்றும் கழிப்பறை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். தொடர்ந்து, சீலக்காரியம்மனுக்கு தீப ஆராதனை செய்த நிலையில் எம்எல்ஏ சாமி தரிசனம் செய்தார்.

இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகளான ஜான்சன், பிரபு, பிரேம்குமார் மற்றும் கிராம நிர்வாகி நாராயண சாமி, முன்னாள் சிந்துபட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன் மற்றும் கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top