Close
ஜனவரி 15, 2025 9:43 காலை

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் கொமதேக பணிக்குழு அறிவிப்பு..!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

நாமக்கல் :

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவதற்காக கொமதேக சார்பில்தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுற்றதாவது:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில், திமுக வேட்பாளர் வேட்பாளர் சந்திரகுமார் போட்டியிடுகிறார். அவரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, தேர்தல் களத்தில் கொமதேக கடுமையாக உழைக்கும்.

அதற்கான தேர்தல் பணி குழு மாநில துணை பொதுச்செயலாளர் சக்தி நடராஜன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்குழு விபரம்: தலைவர் சக்தி நடராஜன், துணைத்தலைவர்கள்: மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி, ஈரோடு கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கோவிந்தராசு,

ஆலோசகர்கள் :மாநில அவைத்தலைவர் ஜெகநாதன், மாநில பெருளாளர் கேகேசி பாலு, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன். உறுப்பினர்கள்: பொன்னுவேல், பவானி ராஜா, ஈஸ்வரமூர்த்தி, பிரபாகரன், ஸ்ரீகுமார், சாமிநாதன், சிவராஜ், லோகநாதன், முத்துசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top