Close
ஜனவரி 14, 2025 10:24 மணி

வாடிப்பட்டி அருகே பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் : முன்னாள் அமைச்சர் வழங்கினார்..!

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் வாடிப்பட்டி அருகே திருவாளவாயநல்லூர் பிரிவில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சோழவந்தான்:

அதிமுக, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் வாடிப்பட்டி அருகே திருவாளவாயநல்லூர் பிரிவில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன், கருப்பையா மாணிக்கம் , தமிழரசன் நீதிபதி நிர்வாகிகள் துரை தன்ராஜ் வெற்றிவேல் திருப்பதி மகளிர் அணி பஞ்சவர்ணம் லட்சுமி தமிழழகன் ஒன்றிய செயலாளர்கள் அலங்காநல்லூர் ரவிச்சந்திரன் வாடிப்பட்டி வடக்கு மு காளிதாஸ் தெற்கு கொரியர்
கணேசன்,  மதுரை மேற்கு தெற்கு அரியூர் ராதாகிருஷ்ணன் , பேரூர் செயலாளர் முருகேசன் , முன்னாள் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வரும் ஜனவரி 25ல் நடைபெற உள்ள வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரையாற்றி பேசினார். இதில், மாணவரணி நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top