Close
ஜனவரி 23, 2025 5:41 மணி

ஜல்லிக்கட்டில் 6-வது ஆண்டாக சிறந்த காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப் பசு : அசத்தும் பொன் குமார்..!

நாட்டுப்பசு பரிசளிக்கும் பொன்.குமார்.

மதுரை ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு அலங்காநல்லூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பொன்குமார், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடு வழங்குவதை ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கி 2021, 2022, 2023, 2024 ம் ஆண்டுகளில் சிறந்த காளைக்கு கன்றுடன் நாட்டு பசுமாடு வழங்கியுள்ளார். தற்போது 6- வது ஆண்டாக பாலமேடு ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு சிறந்த காளைக்கு நாட்டு பசு மாட்டை கன்றுடன் வழங்கி உள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கார், பைக், மெத்தை உட்பட பெரிய வணிகப் பரிசுகளை தவிர்த்து நாட்டு மாடுகளை பரிசாக வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரிடம் பொன்குமார் கோரிக்கை விடுத்து வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top