Close
ஜனவரி 22, 2025 4:56 மணி

காஞ்சி, 27 நட்சத்திர விருட்ச விநாயகர் ஆலயத்தில் 108 கோ பூஜை..! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!

காஞ்சிபுரம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் ஆலயத்தில் 108 கோ பூஜை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் ஆலயத்தில் 108 கோ பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோபூஜை செய்து இறையருள் பெற்றனர்..

காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது உக்கம் பெரும்பாக்கம் கிராமம். இங்கு அருள்மிகு 27 நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் வருடம் தோறும் பொங்கல் விடுமுறை நாளில் 108 கோ பூஜை நடைபெறுவது.

மேலும் இத்திரு கோயிலில் 27 நட்சத்திர தெய்வ சன்னிதானங்கள் அமைக்கப்பட்டும் அதற்கான பரிகார மரங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் இந்த ஆண்டிற்கான 108 கோபூஜை விழா காலை 8 மணிக்கு மூலவர் நட்சத்திர விநாயகருக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நட்சத்திர விநாயகர் பாலசுப்பிரமணியர் மற்றும் சிவன்பார்வதி உள்ளிட்டோர் திருக்கோயில் வளாகத்தில் எழுந்தருள 108 கோ பூஜை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு கோ பூஜை செய்து தீபா ஆராதனை செய்தும் வழிபட்டு இறையருள் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட 108 கால்நடைகளுக்கும் சிறப்பு பூஜை திருக்கோயில் சார்பாக செய்யப்பட்டு கால்நடைகளுக்கு வாழைப்பழம் அகத்திக்கீரை உள்ளிட்ட பொருட்கள் உணவாக வழங்கப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top