Close
ஜனவரி 22, 2025 7:06 மணி

உசிலம்பட்டியில் எம்ஜிஆர் பிறந்ததினம் : எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை..!

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்எல்ஏ ஐயப்பன்.

திருமங்கலம் அருகே கண்டுகுளம் கிராமத்தில் எம்ஜிஆர் சிலைக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருமங்கலம்:

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருமங்கலம் அருகே உள்ள கண்டுகுளம் கிராமத்தில் எம்ஜிஆர் திருஉருவ சிலை உள்ளது. ஓபிஎஸ் அணி சார்பாக உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ ஐய்யப்பன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, கண்டுகுளம் கிராமத்தில் அவர்களுடைய சொந்த முயற்சியால் எம்ஜிஆர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் மக்கள் 50 வருடங்களாக தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

அதே போல் இன்றும் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி பொய்யான வாக்குறுதிகளை அளித்து இதுவரை எந்த உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு அதிமுக கட்சிகள் வரும் சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெறச் செய்யவேண்டும் என பேசினார்.

ஓபிஎஸ் நகரச் செயலாளர் ராஜாமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அமமுக கட்சி சார்பாக அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவர் பேசியதாவது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். அவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் தற்போது வரை பெயர் சொல்லும் அளவிற்கு உள்ளது.தற்போது திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என அம முகஒன்றிய செயலாளர் சிவபாண்டி உள்ளிட்ட ஓபிஎஸ் கட்சி நிர்வாகிகள் அமமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top