நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில், 2 நாட்கள் லோசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி 0.4 மி.மீ. மழை பெய்தது. அதன் பின்னர் மழை இல்லை. நாளை 18ம் தேதி மழைக்கு வாய்ப்பு இல்லை. 19ம் தேதி 10 மி.மீ, 20ம் தேதி 15 மி.மீ. மழை பெய்ய வாய்ப்புள்ளது. 21 மற்றும் 22ம் தேதி மழை பெய்ய வாய்ப்பில்லை. பகல் நேர வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செண்டிகிரேட் வரை இருக்கும். இரவு நேர வெப்பநிலை 20 முதல் 21 டிகிரி செல்சியாக இருக்கும். வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 52 முதல் 78 சதவீதம் வரை இருக்கும். கிழக்கு, மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து மணிக்கு 4 முதல் 12 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கோழிப்பண்ணையாளர்களுக்கு: கடந்த வாரம் ஆய்வகத்தில், இறந்த கோழிகளை பரிசோதணை செய்ததில், கோழிகள் பெரும்பாலும் இறக்கை அழுகல் மற்றும் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கும் தீவனத்தில் நுன்னுயிர் கிருமிகளின் தாக்கம் மற்றும் ஈகோலை தாக்கம் உள்ளதா என்பதை சோதனை மூலம் கண்டறிந்து, டாக்டர்களின் ஆலோசனைப்பட்டி பண்ணை மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.