எம்ஜிஆரின் 108 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் வடமதுரை,வெங்கல், தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய செயலாளர் எம். மகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு மற்றும் அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான புரட்சித்தலைவர், பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 108-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் எம். மகேந்திரன் தலைமையில் வடமதுரை அரசு பள்ளி அருகே உள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அண்ணா எம்.மகேந்திரன், எல்லாபுரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர்த்துவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும், இனிப்பு வழங்கினார்.இதில் ஒன்றிய இணை செயலாளர் அம்பனி மகேந்திரன், மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் எம்.ராஜா, மாவட்ட அம்மா பேரவை தலைவர் ராஜீவ் காந்தி, கிளைச் செயலாளர் சீனிவாசன், எல்லாபுரம் ஒன்றிய மாணவரணி இணை செயலாளர் வடமதுரை கு.புஷ்பராஜ், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வெங்கல் பகுதியில் வழக்கறிஞர் லிங்கன் ஏற்பாட்டில் பேருந்து நிறுத்தகம் பகுதியில் வைக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, ஏழை மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தாமரைப்பாக்கத்தில் நிர்வாகி மணிகண்டன் ஏற்பாட்டில் 1000 பேருக்கு அறுசுவை பிரியாணி வழங்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முன்னதாக ஒன்றிய செயலாளர் மகேந்திரன் கலந்துகொண்டு எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து,கேக் வெட்டி ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கினார். இதில் நிர்வாகிகள் பொன் பழனி, திருவேங்கடம், சுரேந்தர், ரமேஷ்,மனோகரன், ரமேஷ், பெருமாள் ஆகியோர் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.