Close
ஜனவரி 22, 2025 5:10 மணி

பரந்தூரில் நிபந்தனை இல்லாமல் போராட்டக்குழுவை சந்திக்க அனுமதி : தவெக மாநில பொருளாளர்..!

எஸ்பியை சந்தித்த பின்னர் தவெக நிர்வாகிகள்

பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு குழுவினரை சந்திக்க எந்தவித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலைய திட்டம் செயல்பட உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 908 வது நாளாக போராட்ட குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் இருபதாம் தேதி போராட்ட குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேரில் சந்திக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் உடன் தவெக மாநில பொருளாளர் வெங்கட்ராமன் மற்றும் வழக்கறிஞர் குழுவினர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு மற்றும் அவரின் வருகை வழித்தடங்கள் , ஆலோசனை கூட்டம் நடத்த உள்ள நேரம் உள்ளிட்டவைகள் இறுதிச் செய்யப்பட வேண்டிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில பொருளாளர் வெங்கட்ராமன், விஜய் வருகை குறித்து காவல்துறை சார்பில் தற்போது எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை, இந்தியா கூட்டணியில் இணைய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அழைப்பு விடுத்தமைக்கு இன்னும் அதற்கான காலம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தலைவரின் வருகை மற்றும் திட்டங்கள் குறித்து இன்று மாலை அல்லது நாளை இறுதிச் செய்யப்படும் என தெரிவித்தார்.

சந்திப்பு குறித்து

எஸ்.பி சண்முகம் தெரிவிக்கையில், சந்திக்கும் இடம் குறித்து ஆலோசனைகள் தெரிவித்ததாகவும் ஏகனாபுரம் கிராமம் அம்பேத்கர் சிலை மற்றும் அதன் அருகே உள்ள திடல் அதனைத் தொடர்ந்து தனியார் விடுதி என மூன்று இடங்களில் வாய்ப்பு குறித்து தெரிவிக்கவும் எனவும், அதன் பின்பு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்படும் எனவும், மேலும் அவர்களது நிர்வாகிகள் மட்டுமே இந்நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாகவும் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் வர மாட்டார்கள் எனவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top