Close
ஜனவரி 22, 2025 7:08 காலை

கடையம் மாட்டுச்சந்தை அருகே அரசு-தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

விபத்தில் சேதமான பேருந்து

கடையம் மாட்டுச்சந்தை அருகே அரசு-தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து :20க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து அகஸ்தியர் பட்டிக்கு அரசு பேருந்து ஒன்று இன்று புறப்பட்டது. கடையம் பேருந்து நிலையம் வந்த பின்பு பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு கடையம் மாட்டுச்சந்தை வளைவு பகுதியை சென்றபோது எதிரே அம்பையிலிருந்து செங்கோட்டைக்கு வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது

இதில் இரண்டு பேருந்துகளில் முன் பகுதி சேதமானது. பேருந்து டிரைவர்கள் உட்பட இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்துள்ளனர் .

தகவல் அறிந்த கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா தலைமையிலான போலீசார் காயமடைந்தவர்களை மற்ற வாகனங்களிலும் தனது போலீஸ் வாகனத்திலும் ஏற்றி கடையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .

தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் .

இந்த விபத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர் செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top