மதுரை:
மதுரை மாவட்ட கோயில்களில், தேய்பிறை பஞ்சமி யை முன்னிட்டு, வராஹியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சணைகள் நடைபெற்றது.
மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்துமாரியம்மன், மதுரை வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயம், மதுரை பாண்டி கோயில், ஜெ. ஜெ. நகர் வர சக்தி விநாயகர், மதுரை தாசில்தார் மருதுபாண்டியர் தெரு அருகே செபாக் விநாயகர் ஆலயங்களில், தேய்பிறை பஞ்சமி யை, ஒட்டி வராஹியம்மனுக்கு , சிறப்பு ஹோமங்களும், அர்ச்சணைகள் நடைபெற்றது.
இதில், பக்தர்கள் கலந்து கொண்டு, வராஹியம்மனுக்கு, மஞ்சள் மாலை அனிவித்தனர். இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாரங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.