ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி நடத்திய CIO Olympics விளையாட்டுப் போட்டிகள் நேசம் மக்கள் நல சேவை மைய திடலில் நடைபெற்றது.
30க்கும் மேற்பட்ட போட்டிகளில் சுமார் 90க்கும் மேற்பட்ட குழந்தைகளும், 35க்கும் மேற்பட்ட CIO மாணவிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு CIO பொறுப்பாளர் சகோதரி நிஹ்மத் ஹசீனா தலைமை வகித்தார். GIO பொறுப்பாளர் சகோதரி புதுரா பஜிலா வரவேற்றார். தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தென்மண்டல தலைவரும், சமூக நல்லிணக்க பேரவையின் கௌரவத் தலைவருமான லயன்.சுபேதார். V.மகாராஜன் விளையாட்டு வீரர்களின் பேரணியை துவக்கி வைத்தார்.
மாநகர ஜமாத் தலைவர் சர்புதீன் CIO கொடி ஏற்றி வைத்தார். அகில இந்திய திருணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஹக்கிம், கலைஞர் நூலக நிர்வாகியும், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினருமான ஜெயபிரகாஷ், அரசு சார்நிலை கருவூல கணக்கரும் TNPSC பயிற்றுனருமான கவிஞர் ஷர்ஜிலா பர்வீன் யாக்கூப், கம்பம் டைனிபார்க் கிட்ஸ் பிளே ஸ்கூலின் தாளாளர் மஹசபின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சமூக நல்லிணக்க பேரவை கௌரவ தலைவர் ஹபிபுல்லாஹ், வெல்ஃபேர் கட்சியின் மாவட்ட தலைவர் முகமது சபி உள்ளிட்ட பெரியோர்கள் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் பரிதா நன்றி கூறினார்.