மதுரை:
மதுரை, கடச்சனேந்தல் அருகே உள்ள செம்பியனேந்தல் கிராமத்தில், ஃப்ரீடம் பவுண்டேஷன் (Freedom Foundation) (மது / போதை மறுவாழ்வு மையம்), மதுரை இக்வல் கேர் பவுண்டேஷன் மற்றும் அமெரிக்கன் கல்லூரியின் சமூகப் பணித்துறை மாணவர்கள் சார்பில், மது மற்றும் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
செம்பியனேந்தல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமலை தலைமை தாங்கினார். மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முக்கிய நோக்கமாக கிராம மக்களிடையே மது மற்றும் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீவிர எதிர்விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
சிறப்பு சொற்பொழிவுகள், உரையாடல்கள் மற்றும் தகவல் மிக்க கையேடுகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளை கேட்டு, இளைஞர்களுக்கிடையே மது மற்றும் போதை அழிப்பிற்கு தீர்வுகள் குறித்த ஆலோசனைகள் மற்றும் நாடகங்கள் நடத்தப்பட்டது.
இதில், கிராம பொதுமக்கள், பெண்கள் குழந்தைகள்,மதுரை ஈக்குவல் கேர் ஃபவுண்டேஷன் நிதியுதவி அறங்காவலர் வீரபுத்திரன், ஃப்ரீடம் பவுண்டேஷன் மனநல ஆலோசகர் ஹரிஹரன், மதுரை அமெரிக்கன் கல்லூரி சார்பாக சமூகப்பணி துறை மாணவர்கள் பாலமுருகன், கிருஷ்ணவேணி, ஹரண்ராஜ், விஜய் கிருஷ்ணன், தேசிங்கு ராஜா, குருஜித், மதன் கார்த்திக், கிஷோர் மற்றும் யோகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.