Close
ஜனவரி 22, 2025 7:59 மணி

விக்கிரமங்கலம் அருகே அரசமரத்துப்பட்டி மந்தை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!

கும்பாபிசேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், எரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு சோழவந்தான் கும்பாபிஷேக பாலமுருகன் தலைமையில் ஆச்சாரியார்கள் இரண்டு நாட்கள் யாக பூஜை நடத்தினர்..இதைத் தொடர்ந்து, யாகபூஜை நடைபெற்று பூர்ணாஹீதி நடந்தது. இதைத் தொடர்ந்து மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.

மந்தை அம்மனுக்கு பால் தயிர் உட்பட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, அரசமரத்துபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top