நிலக்கோட்டை:
மதுரை மற்றும் வத்தலக்குண்டில் அரஃபா ஹெல்த் கேர் சென்டர் எனும் இயற்கை மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் யூசுப் மௌலானா இயற்கை வாழ்வியல் ஆலோசகர் மற்றும் டார்ன் தெரபி சிகிச்சையாளருமான இவர், அக்குபஞ்சர்,டார்ண் தெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மூலம் பல்வேறு நோய்களையும் குணப்படுத்தி வருகிறார்.
உணவுப் பழக்க வழக்கங்கள் மூலம் இவரது இயற்கை மருத்துவத்தில் குறைந்த செலவில் குணம் பெற்றோர் இவரை “மக்களின் மருத்துவர்” என்ற அடைமொழியுடன் அன்புடன் அழைக்கின்றனர்.
பல்வேறு விருதுகள் பெற்ற இவர், தற்போது வத்தலக்குண்டு ரோட்டரி சங்க தலைவராகவும் இருந்து பல்வேறு சமூக சேவையாற்றி வருகிறார். இந்நிலையில்,
இவரது வத்தலக்குண்டு அரஃபா ஹெல்த் கேர் சென்டரின் 8 ஆம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இதில், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு டாக்டர்.யூசுப் மௌலானா அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.