Close
ஜனவரி 22, 2025 3:59 மணி

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் 25ம் தேதி வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்..!

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல் :

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில், வரும் 25ம் தேதி, நாமக்கல்லில் வீர வணக்கம் நாள் பொதுமக்கூட்டம் நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக, மாணவரணி சார்பில் வீரவணக்கம் நாள் பொதுக்கூட்டம், வருகிற 25ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் தலைமை வகிக்கிறார்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர், கடலூர் புகழேந்தி, பேச்சாளர் ஆரணி மாலா ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

கூட்டத்தில் ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள், பிஎல்2 நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top