Close
ஜனவரி 23, 2025 2:40 மணி

பொதுமக்களின் கலைஞர் கனவு இல்ல குறைபாடுகளை நீக்க கண்காணிப்பு அலுவலர் எச்சரிக்கை..!

கலைஞர் கனவு இல்லம்-கோப்பு படம்

பொதுமக்களின் தேவைக்கேற்ப அவர்களின் கலைஞர் கனவு இல்ல திட்டத்தினை தவறின்றி செயல்படுத்த அலுவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்திய செயல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்ந்த பல்வேறு செயல் திட்டங்கள் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் செயல்படும் திட்டங்களை முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளராக டாக்டர் செந்தில்குமார் நியமிக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

அவ்வகையில் இன்று சுங்குவார்சத்திரம் அடுத்த குன்ணம் கிராம ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

அங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் திறனையும் கேட்டறிந்து இலகுவான முறையில் கல்வி கற்க ஆசிரியர்கள் முயல வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்..

குன்னம் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் கட்டும் பணியினை ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய குடியிருப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

குடியிருப்பில் அளவுகளை டேப் மூலம் நேரடியாக அளந்து வரைபடத்தில் உள்ள அளவுகளை ஒப்பிட்டு சரி பார்த்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது.

உடனடியாக ஊராட்சி ஒன்றிய பொறியாளரை அளவீடு செய்ய சொல்லி பொதுமக்களின் கனவுகளை நினைவாக்கும் விதமாக செயல்படும் இத்திட்டத்தில் அவர்களின் வசதிக்காகவும், அதே நேரம் எந்தவித குறைபாடுகள் இன்றி செயல்படுத்த வேண்டும் என எச்சரிக்கும் வகையில் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் ஆர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்இலக்கியா பார்த்திபன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் என உடன் இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top